வீடு கட்டுவதற்கு லஞ்சம் பெற்ற அதிகாரி : கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினார்!!

By: Udayachandran
15 October 2020, 10:34 am
Bribery Arrest - Updatenews360
Quick Share

புதுச்சேரி : ரூ. 5000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்- சிபிஐ அதிகாரிகள் பொறி வைத்து பிடித்தனர்.

புதுச்சேரி அடுத்த தேங்காய் திட்டு பகுதியை சேர்ந்தவர் இளந்திரையன். இவர் தேங்காய் திட்டு பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக மணல், ஜல்லி, கற்களை வீட்டு முன்பு கொட்டி இருந்தார். வீதியில் கொட்டுவது தவறு, எனவே நீங்கள் வீடு கட்ட கூடாது என்று புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை இளந்திரையன் அணுகிய போது, ரூ 5000 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார்.

இது குறித்து சென்னை சிபிஐ அதிகாரிகளுக்கு இளந்திரையன் புகார் தெரிவித்தார். இதன் பேரில் 10 சிபிஐ அதிகாரிகள் இன்று புதுச்சேரி வந்தனர். பின்பு இளந்திரையனை சந்தித்து பேசிய அதிகாரிகள், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தனர். பின்பு கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்த போது, கம்பன் கலையரங்கத்தில் உள்ள அலுவலகம் பார்க்கிங் பகுதிக்கு வருமாறு இளந்திரையனிடம் தெரிவித்தார்.

இதன் பேரில் அங்கு சென்ற இளந்திரையன், ரசாயனம் தடவிய பணத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தார். அதை அவர் பெற்று கொண்ட போது, மறைந்து இருந்த சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்பு நகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Views: - 44

0

0