பிண்ணிப் பிணைந்த பாம்புகளை பிடித்த முதியவர்! வைரலாகும் வீடியோ!!
23 August 2020, 5:54 pmகாட்டில் பிண்ணிப் பிணைந்த பாம்புகளை முதியவர் ஒருவர் அலேக்காக தூக்கி வந்த காட்சி வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பாம்புகள் பிண்ணிப் பிணைந்தால் அது சேர்க்கைக்காக சண்டையிட்டு கொள்வதாக ஒரு கருத்து உள்ளது. அப்போது பாம்புகளை தொந்தரவு செய்தால் அது கடும் ஆக்ரோஷத்துடன் இருக்கும், அதை தொந்தரவு செய்யக் கூடாது என்ற கருத்துகளும் உள்ளன.
ஆனால் கிட்டத்தட்ட 6 அடி உயரத்துக்கு பிண்ணிப் பிணைந்து எழும் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று வீரியத்துடன் மோதிக் கொள்கின்றன. காட்டிற்குள் பிண்ணிப் பிணைந்த பாம்புகளை சற்றும் அச்சப்படாத முதியவர் ஒருவர் அந்த பாம்புகளை சர்வ சாதாரணமாக தூக்கி வரும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அங்கிருப்பவர்கள் அவரிடம் பாம்பை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் அவர் அதை கேட்காமல், இரு பாம்புகளையும் தரதரவென்று இழுத்து வருகிறார். அந்த பாம்புகளும் முதியவரை ஒன்றும் செய்யவில்லை. இந்த காட்சி படுவேகமாக வைரலாகி வருகிறது.