கவனம் தவறினால் மரணம்.. அதிவேகத்தில் வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை யை சேர்ந்த வழக்கறிஞர் மனோகரன் (வயது 60) நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் சென்றார் .
பின்னர் அங்கிருந்து இரவு நிலக்கோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது சின்னாளபட்டி அடுத்து திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் பெருமாள்கோவில்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது.
மிதி வண்டியில் சாலையை கடக்க முயன்ற பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த சின்னகாளை-62 இணைப்பு சாலையை முயன்று சாலையின் நடுவே சென்றபோது, கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் மனோகரன் மிதிவண்டி மீது மோதாமல் இருப்பதற்காக இரு சக்கர வாகனத்தை கட்டுப்படுத்திய போது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிதிவண்டியில் சென்ற கொண்டிருந்த முதியவர் மீது மோதி சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசியது.
விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞரும் இருசக்கர வாகனத்தோடு சாலையில் கவிழ்ந்து தரதரத என இழுத்துச் செல்லப்பட்டார்.
சம்பவம் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர் பார்த்தபோது சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் மனோகரன் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மிதிவண்டியில் வந்த முதியவர் சின்னக்காளை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து அம்பாத்துறை காவல் ஆய்வாளர் மீனாட்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்ததிலையில். விபத்தில் இறந்த மனோகரன் திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவராக இருந்தவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னக்காளை சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்தார். தற்போது விபத்து நடைபெற்ற இடத்தில் பதிவு செய்யப்பட்ட , மிதி வண்டியும் இருசக்கர வாகனமும் மோதிக்கொள்ளும் பாதைப்பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திவருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.