கடைக்காரருக்கு கல்தா… கண நேரத்தில் 2 தங்க செயினை ஆட்டையை போட்ட பாட்டி ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!!!

Author: Babu Lakshmanan
3 June 2023, 4:13 pm
Quick Share

கடைக்காரர் அயர்ந்த கண நேரத்தில் 2 தங்க செயினை பர்தா போட்ட மூதாட்டி ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள செம்மபாடு பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவல்லரி ஒன்றில், நேற்று நகை வாங்குவது போல் நாடகமாடி வந்த மூதாட்டி ஒருவர், கடைக்காரர் அயர்ந்த நேரத்தில் இரு தங்க செயினை கைக்குள் மறைத்து திருடியுள்ளார்.

பின்பு அங்கிருந்து எதுவும் வாங்காமலும் சென்றுள்ளார். அவர் போன பின்பு தான் இரு செயின்கள் திருட்டு போனதும், சிடிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மூதாட்டி திருடுவதும் பதிவாகிருந்தது. பின்பு கடை உரிமையாளர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மூதாட்டி செயின் திருடும் சிசிடிவி காட்சிகளின் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

Views: - 162

0

0