கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் OLX செயலி மூலம் கூட்டுறவு வங்கிகளில் காலிபணியிடங்கள் நிரப்பபடுவதாக விளம்பரப்படுத்தி மோசடி நடப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- OLX செயலி மூலம் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்க செய்வதாகவும், சேலம், அம்மாப்பேட்டை, ஓமலூர், மேட்டுர், அந்தியூர், பவனி, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரமடை, நாமக்கல். சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் கூட்டுற வங்கிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மேற்படி காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், அதன் பொருட்டு நேர்காணல் நடைபெறுவதாகவும், பணியின் பொருட்டு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்து OLX செயலி மூலம் விளம்பரப்படுத்தி 8220433383 சாண்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளத் தெரிவித்துள்ள செய்தி முற்றிலும் பொய்யாண செய்தி எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்படி OLX செயலி மூலம், பரப்பப்பட்டுள்ள பொய்யான தகவல்களை கொண்டு எவரும், கூட்டுறவு நிறுவனத்தில் வேலை காலியாக உள்ளது என்று நம்பி எவரிடமும், பணத்தையோ, அல்லது உடமைகளை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் எனவும், கூட்டுறவு நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் ஏதும் நிரப்பிட தற்போது கூட்டுறவுத் துறையின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும், மேற்படி பரப்பப்பட்டுள்ள பொய்யாண தகவல்களை நம்பி பொதுமக்கள் யாரும் எவரிடமும், பணம், பொருள், உடைமைகளை கொடுத்தால் ஏமாற்றப்படுவீர்கள் எனவும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.சஸ்.சமீரண் ஆப. அவர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது போன்ற OLX செயலி மூலம் குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது, உரிய குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும், பொய்யான செய்திகளை பரப்பி பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.