குடிக்க பணம் கேட்டு தகராறு… பெற்ற மகனை துடிக்க துடிக்க கொலை செய்த தந்தை..!

Author: kavin kumar
3 January 2022, 2:26 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி செந்தணீர்புரம் வ.உ.சி.தெரு சேர்ந்தவர் அற்புதராஜ். இவரது மகன் அப்பு என்கிற வில்சன் ஆண்ட்ரூஸ். திருமணமாகி தனது மனைவியை பிரிந்து தாய், தந்தையுடன் வாழ்ந்து வந்தார். மனைவியை விட்டுப் பிரிந்த நிலையில் மனமுடைந்த நிலையில் இருந்தார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டிருந்தார். மேலும் மது அருந்த தன்னிடம் பணம் இல்லாததால் பலரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு வில்சன் ஆண்ட்ரூஸ் தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் தந்தைக்கும் மகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த தந்தை அற்புதராஜ் அவரது வீட்டில் உள்ள தனி அறையில் வில்சன் ஆண்ட்ரூஸின் கைகளையும் கால்களையும் நைலான் கயிற்றால் கட்டி வைத்து மப்ளர் கொண்டு கழுத்தை இறுக்கி மகன் கொலை செய்து மேலும், ஆத்திரம் தாங்காது அற்புதராஜ் சமையலறையில் இருந்த கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து அருகில் குடியிருந்தவர்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்று காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வில்சன் ஆண்ட்ரூஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தை அற்புதராஜை கைது செய்து தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 319

0

0