வேலூர் மாவட்டம் அருகே மனைவியின் பெயரில் 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஹரியான மாநிலம் குருகிராம் நகரை சேர்ந்தவர் ரவிகாந்த் லஷ்மணன் ராவ் ஜாரங். இவர் இந்திய அளவில் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிறுவனத்தின் கிளை சென்னையில் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவிகாந்த் லஷ்மணன்ராவ் ஜாரங் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த சீத்தாராமன் (32) என்பவர் தங்கள் நிறுவனத்தோடு இணைந்து இடைத்தரகராக வியாபாரம் செய்ய ஆன்லைன் மூலம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்து இணைந்ததாகவும், பிறகு ஏப்ரல் மாதம் வரை சுமார் 2 கோடி வரை வியாபாரம் செய்த நிலையில், மேலும் வியாபாரத்தை தொடர ஒரு கோடியே 80 லட்சத்தை பெற்றுக்கொண்டு நீண்ட நாள் ஆகியும் பொருட்களை வழங்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் அழைத்ததாகவும், இதுநாள் வரை 70 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கிய நிலையில், மீதமுள்ள தொகையை செலுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்ற பிரிவு காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் A1 குற்றவாளியான சீத்தாராமன் என்பவர், மேலும் சிலர் இத்தொழில் ஈடுபடுவதாக கூறி அவர்களை இணைத்துள்ளார். இதில் குடியாத்தத்தை சேர்ந்த சத்தீஷ்குமார், வசந்தகுமார், அகரம் சேரியை சேர்ந்த சரவணன் ஆசை தம்பி ஆகிய 3 பேருக்கு சீத்தாராமனே புதியதாக வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 80 லட்சத்தை பெற்றுள்ளார்.
இதில் 70 லட்சத்தை திருப்பி செலுத்திய நிலையில் மற்ற பணத்திற்கு போலியான ஆவணம் மற்றும் பில்லை தயாரித்து அந்நிறுவனத்தில் வழங்கியுள்ளார். மேலும் இம்மூவரின் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் தனது மனைவி விஜிதா வங்கி கணக்கிற்க்கு மாற்றியுள்ளார்.
இப்படி மோசடி செய்த பணத்தில் சீத்தாராமன் புதியதாக ஒரு பென்ஸ் கார், ஒரு டிராவல் வேன், அகரம் சேரியில் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததோடு, மேலும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் பெங்களூருவில் இருந்து பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, மொத்த பணமும் காலியாகிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தனது மனைவி விஜிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது அறுவை சிகிச்சைக்காக தன்னிடம் உள்ள ட்ராவல் வாகனத்தை அடமானம் வைத்து பணத்தை மருத்துவமனையில் கட்டி உள்ளார்.
இதனை அடுத்து, மருத்துவமனையில் இருந்த மோசடி பேர்வழி சீத்தாராமனை கைது செய்த மாவட்ட குற்ற பிரிவு காவலர்கள், அவரது கூட்டாளிகளான சரவணன், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைக்கு பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குடியாத்தத்தை சேர்ந்த வசந்தகுமார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சரண்ராஜ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
மேலும், இது குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் மாவட்ட குற்ற பிரிவு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.