ஈமு கோழி மோசடி வழக்கில் 6 பேருக்கு ஒரு நாள் சிறை : தலா ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2022, 7:10 pm
emu Case - Updatenews360
Quick Share

கோவை : ரூ.1.26 கோடி ஈமு கோழி மோசடி வழக்கில் 6 பேருக்கு ஒரு நாள் நீதிமன்றம் களையும் வரை சிறை மற்றும் பிணையில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சக்தி ஈமு பார்ம்ஸ் ஈமு கோழி வளர்ப்பில் மாதம் பராமரிப்பு மற்றும் திட்டம் முடிவில் முதலீட்டு தொகையை திருப்பி தருவதாக கூறி விளம்பரப்படுத்தி 62 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 26 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

இதையடுத்து 2012ல் மதுரையை சேர்ந்த பரமேஸ்வரி என்ற முதலீட்டாளர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து 62 முதலீட்டாளர்களில் 26 பேருக்கு நீதிமன்றம் மூலமும், 31 பேருக்கு நீதிமன்ற அல்லாத நடவடிக்கையின் மூலம் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

ஆனால், 5 முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி செலுத்தாததால் வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது தீர்ப்பின்போது இன்று ஆஜராகாததால், நிறுவனத்தை சேர்ந்த ராமசாமி, சாமியாத்தாள், தங்கவேல், தேவி, பழனிச்சாமி, சந்திரன் ஆகிய 6 பேருக்கும் பிணையில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவவிட்டது.

மேலும், 6 பேருக்கும் தலா ஒரு நாள் நீதிமன்றம் களையும் வரை சிறை தண்டனையும், தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் 6 பேருக்கும் ரூ.10.50 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 924

0

0