சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.. ஆனால் 3 மணி நேரம்.. வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல்!
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
பின்னர், நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு சங்கரை வழக்கு விசாரணைக்காக 5 நாட்கள் விசாரிக்க வேண்டும் என கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் கோவை சைபைர் கிரைம் போலீசார் கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணை முடிந்து மீண்டும், நாளை மாலை சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, சவுக்கு சங்கர் சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனுவிற்கு ஒத்துழைப்பு தந்தோம். நாளை மாலை 5 மணி வரை விசாரணையின் வரை ஒவ்வொரு 3 மணி நேரமும் 15 நிமிடம் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட அறையில் இருந்து மாற்றப்பட வேண்டும் என்பதை சிறைத்துறையில் நடப்பதை அப்போது சொல்வோம்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் வழக்குல காட்டுற வேகம் ஜெயக்குமார் மரண வழக்குல காமிக்கலாமே? தமிழக பாஜக வாய்ஸ்!
குண்டர் சட்டத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம் அதற்கு கால அவகாசம் உள்ளது என இவ்வாறு சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.