நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர் கதையாக இருந்துவருகிறது.
சென்னை ஐ.ஐ.டியிலும் கடந்த சில வருடங்களாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்துவருகிறது.
தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாகவும் இருந்துவருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐ.ஐ.டியில் பயின்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் சென்னை ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி மாணவராக பயின்று வந்தார். அதேநேரத்தில் மற்றொரு மாணவரும் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாக தற்போது சென்னை ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பி டெக் படித்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விடுதி நிர்வாகம் அளித்த தகவல் பேரில் கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத கணக்கின்படி, ஆறு ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டியில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.