ஒருத்தன் வேட்டைக்காரன், ஒருத்தன் சாதுவானவன் : முயலும் பூனையும் நண்பர்கள் ஆன கதை!!

22 November 2020, 3:36 pm
Cow And RAbbit - Updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சி அருகே பூனையும் முயலும் நண்பர்கள் ஆன நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்துள்ள பரம்பிக்குளம் பகுதியில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஒட்டி ஐம்பதுக்கு மேற்ப்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர், வனப்பகுதியை விட்டு அடிக்கடி புள்ளிமான், மயில், முயல் எனவை வந்து மலைவாழ் மக்களுடன் நண்பர்களாக பழகி தினமும் இவர்கள் வீட்டுக்கு உணவு தேடி வருகிறது.

இதையடுத்து வனத்தை விட்டு வெறியேறிய காட்டுமுயல் குட்டி மலைவாழ் மக்கள் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்தது, இவர் வீட்டில் பூனை வளர்த்து வருவதால் பயம் இருந்தது ஆனால் பூனையும் முயல் குட்டியும் ஒன்றாக பழக ஆரம்பித்தது.

இவர்கள் குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, பூனை வேட்டை ஆடும் குணம் கொண்டது, முயல் சாதுவானது, பூனைக்கு செம்மீ எனவும் முயலுக்கு மோட்டோ என பெயர் வைத்து அழைக்கின்றனர்.

நாள்டைவில் மலைவாழ் மக்கள் வீட்டில் உள்ள நபர்களிடம் ஒன்றாக உறக்குவதும், விளையாடுவதும், தட்டில் வைக்கும் உணவை ஒன்றாக சாப்பிடவதும் அங்குள்ள பொதுமக்களுக்கு மகிழ்ச்சி ஏற்ப்படுத்தி உள்ளது, தற்போது செம்மீயும், மோட்டோவும் ஒன்றாக சாப்பிடும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரல் ஆகிவருகிறது.

Views: - 25

0

0