கோவையில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: பட்டப்பகலில் கைவரிசை…ஷாக் வீடியோ!!

Author: Rajesh
10 April 2022, 1:01 pm
Quick Share

கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.

கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செல்போன் கடைகள், டீ கடைகள் பேக்கரி கடைகள் உணவகங்கள் உள்ளன. செல்போன் கடை வாசலில் கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த கடையில் வயதான முதியவர் ஒருவர் திருடும் போது சிசிடிவி கேமரா ஆதாரம் மூலமாக போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று பேருந்து பயணி போல் ஒருவர் நின்று கொண்டு கைக்கடிகாரத்தை திருடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இது குறித்து கடை உரிமையாளர் மலைக்கொழுந்து கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர் தொடரும் திருட்டு சம்பவத்தால் கோவை டவுன் பேருந்து நிலைய பயணிகள் மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

Views: - 406

0

0