ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு…! அண்ணா பல்கலை.க்கு ஓகே சொன்ன தமிழக அரசு

10 August 2020, 9:25 pm
Anna univercity UpdateNews360
Quick Share

சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி தந்திருக்கிறது. கடந்தாண்டு வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்  முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் இப்போது கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகையால் எம்.இ, எம்.டெக் போன்ற பொறியியல் உயர் படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்த தமிழக அரசிடம்  அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பித்து இருந்தது.

இந்நிலையில்  அண்ணா பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை ஏற்று முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, ஆன்லைனில் கலந்தாய்வுக்கு அனுமதி பெறப்பட்ட விவரத்தை  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலியாக நேரடி கலந்தாய்வுக்கு பதிலாக ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Views: - 7

0

0