ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கு : கோலி, கங்குலி, தமன்னா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

3 November 2020, 3:52 pm
Quick Share

மதுரை : உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் கோலி, கங்குலி, தமன்னா உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் கோவையில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, சென்னை மற்றும் பிற நகரங்களில் இதுபோன்ற ஆன்லை சூதாட்டங்களில் பணத்தை இழந்தவர்கள், தங்களின் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. எனவே, உயிரைக் குடிக்கும் இதுபோன்ற ஆன்லை சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரியும், அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிடப்பட்டது. ஆனால் முறையீட்டுக்கு பதிலாக, மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பர தூதர்களான கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர் பிரகாஷ் ராஜ், சுதீப், நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பாக்கெட்டுகளை நிரப்புவதில் விளம்பரம் செய்யும் பிரபலங்கள் கவனம் செலுத்துவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

Views: - 16

0

0

1 thought on “ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கு : கோலி, கங்குலி, தமன்னா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

Comments are closed.