கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை விநியோகம் செய்த நபரை மதுக்கரை தனிப்படை போலீஸார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய்குமார் (வயது 19). கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
மேலும் அவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி விடுதியில் அறையில் இருந்த அஜய்குமார் திடிரென வாத்தி மயக்கம் எடுத்து கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜய்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பிறகு அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அஜய்குமார் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் நரம்பு வழியாக வலி நிவாரணி மருந்தை எடுத்துக்கொண்டதும், அதனால் ஏற்பட்ட உயர் இரத்த அழுத்ததால் இருதய செயழிலப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
இதனால் மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மதுக்கரை போலீஸார் தனிப்படை அமைத்துu வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மதுக்கரை ஆய்வாளர் வைரம் தலைமையில் உதவி ஆய்வாளர் கவியரசு அடங்கிய போலீஸார் அஜய்குமார் தங்கியிருந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, சக மாணவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அஜய்குமார் ஆன்லைன் மூலம் போதைக்காக மருந்து வாங்கி அதை நரம்பு மூலம் செலுத்திய போது மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதையத்து விசாரணையை தீவிரபடுத்திய போலீஸார் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்தவர் குறித்த தகவல்களை சேகரித்தனர்.
அதில் கும்பகோணத்தில் மருந்தகம் நடத்தி வரும் முகமது பசீர் என்பவர் ஆன்லைன் மூலமாக மருத்துவரின் பரிந்துறையின்றி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆடர்களை பெற்று கொரியர் மூலமாக வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் கவியரசு தலைமையில் கும்பகோணம் சென்ற தனிப்படை போலீசார் முகமது பசீரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதையத்து அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.