இணையதளம் மூலம் பாலியல் வேலை… பெண்களை ஏமாற்றிய பலே மோசடி கும்பலை வளைத்து பிடித்த கோவை போலீஸ்…!!

Author: Babu Lakshmanan
3 August 2022, 9:51 pm
Quick Share

இணையதள செயலி மூலம் பெண்களை பாலியல் வேலை கொடுப்பதாக பணம் மோசடி செய்த கும்பலை கைது செய்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இணையதள செயலி மூலம் பெண்களை பாலியல் வேலைககொடுப்பதாக ஏமாற்றிய கும்பலை கோவை மாநகர போலிசார் கைது செய்துள்ளனர்.இதில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர், பெங்களூரை தலைமை இடமாக கொண்ட லோகேண்டா என்ற வளைதளத்தில் செல்போன் எண்கள் பதிந்து பெண்களை பாலியல் வேலை கொடுப்பதாக பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய கும்பலை கைது செய்துள்ளதாகவும், ஏமாற்றப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் 12 பேர் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவர்களிடமிருந்து 10 சிம்கார்டுகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதில், ரிஸ்வாண் பெண்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளதாகவும், ரிஸ்வான் என்ற முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இவர்கள் போலியான முகவரிக்கு வரச்செல்லி, இணையதளம் மூலம் பணத்தை வசூலித்து வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிந்துள்ளதாகவும், 360 டிகிரியில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஆந்திராவில் இருந்து கஞ்சா அதிகளவில் இறக்குமதி செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், கஞ்சா சாக்லேட் என்பது ராஜஸ்தானில் இருந்து வருவதாகவும், இதுகுறித்து விசாரிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றுள்ளாதாக தெரிவித்தார்.

Views: - 592

1

0