இந்து முன்னணி அமைப்பு சார்பாக கோவை மாநகர் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று விசர்ஜனம் செய்தனர்.
முன்னதாக துடியலூர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, இன்று கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசு, ஐயப்ப மாநாட்டை கேரளாவில் நடத்துகிறார்கள். பேய், பேய் என்று கேட்டால் பிசாசு வருகிறது என்பது போல அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் என்ன பேசுவார் என்று அனைவருக்கும் தெரியும்.
பீகாரில் ராகுல் காந்தி யாத்ராவில் கலந்து கொண்ட ஸ்டாலின் ராஜீவ்காந்தி அவர்களை என்று ராகுலை பார்த்து பேசினார். அதனால் நான் கேரளாவுக்கு செல்ல மாட்டேன் என பி.டி.ஆர் அவர்களையும் இன்று அறநிலைத் துறை அமைச்சரையும் அனுப்பி வைக்கிறார்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசை சபரிமலைக்காக பிரச்சனையை ஏற்படுத்தியவர்கள் இன்று ஐயப்பனுக்காக மாநாடு போடுகிறார்கள்.
நீங்க தி.மு.க முருகனுக்கு மாநாடு எடுப்பது போல கொள்ளை அடிக்கிறவன் எல்லாம் ஒன்றாக சேர்ந்தால் நல்லவர்களாக விட முடியுமா ?.. இவர்கள் முருகனுக்கு மாநாடு எங்கு எடுக்கிறார்கள்?
கம்யூனிஸ்ட் ஐயப்பனுக்கு கேரளாவில் மாநாடு எடுத்தால் இந்து முன்னணி என்ன செய்ய முடியும் ? இதையெல்லாம் கூட உங்களுடைய கவனத்திற்கு முன் வைக்கிறேன்.
சாமானிய மனிதன் என்னிடம் இருக்கக் கூடிய ஒரே ஒரு ஆய்வு தான் நம்முடைய வாக்கு மட்டும் தான், அதைப் போடும் போது ஒரு நிமிடம் யோசித்து, நம்முடைய மனதை எதற்குமே பறிகொடுக்காமல் நம்முடைய வாக்கைச் செலுத்த வேண்டும். அப்படி செய்தாலே ஜனநாயகம் உருப்பட்டு விடும்.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் கொள்ளை கோவில் பராமரிப்பு போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் உட்பட நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட எதையும் அறநிலையத் துறை மதிக்கவே இல்லை.
1986 க்கு பிறகு தமிழகத்தில் கோவிலுடைய சொத்துக்கள் மட்டுமே ஒரு லட்சம் ஏக்கர் நாம் இழந்து இருக்கிறோம். 50 ஆண்டுகளில் கோவில் நிலங்களில் இருக்கக் கூடிய வணிக வளாகங்கள், 1 ரூபாய் வாடகைக்கு இருக்கிறார்கள்.
அதனால் தான் கோவில் சொத்துக்கள் மூலமாக அறநிலைத் துறைக்கு தமிழகத்தில் வரக் கூடிய மொத்த வருமானமே 300 கோடி ரூபாய் தான்.
ஐந்தரை லட்சம் ஏக்கர் இருக்கிறது, 46 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது, ஆனால் கோவில் சொத்துக்கள் மூலமாக வரக் கூடிய வருமானம் மட்டும் வெறும் 300 கோடி தான். அதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கான நேரம் இது தான்.
நீங்கள் இதையெல்லாம் நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். இதையெல்லாம் கேள்வியாக கேட்பதை நம்முடைய கடமையாக கருத வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் நம்முடைய வாக்கை செலுத்துவதற்கு முன்பாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்க வேண்டும், விநாயகருக்கு எப்படி ? நாம் மரியாதை கொடுக்கிறோமோ ? அதேபோல நாம் செலுத்தும் வாக்கு இருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தில் இந்து தர்மம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பெண்கள் ஒவ்வொருவரும் வீட்டில் கைப்பிடி விநாயகரை வைத்து குடும்பத்தோடு வழிபட்டு இதுபோல ஊர்வலம் செல்லக் கூடிய பெரிய விநாயகரோடு இணைத்து அதை நீங்கள் அனுப்ப வேண்டும்.
அடுத்த வருடம் இன்னும் விநாயகர் சதுர்த்தி பட்டிதொட்டியெல்லாம் கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.