பக்தி பாடல்களை பாடி நடனமாடிய கொரோனா நோயாளிகள்!!

2 September 2020, 11:07 am
Ooty Badugar - Updatenews360
Quick Share

நீலகிரி : கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள், பூரண குணமடைய ஹெத்தையம்மன் பாடலை பாடி பக்தி பரவசத்துடன் நடனமாடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதில் மொத்தம் 1614 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 1277 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 327 நபர், குன்னுார், ஊட்டி, மருத்துவமனைகளிலும், ஊட்டியில் உள்ள தனியார் மையத்திலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்கள், ஹெத்தையம்மனை வழிபடும் வகையில், ஹெத்தையம்மன் படுக பாடலை பக்தி பரவசத்துடன் நடனமாடி பூரண குணமடைய, வேண்டி வருகின்றனர்.

Views: - 0

0

0