ஊட்டி ட்ரிப் போறீங்களா?…இது உங்களுக்கு தான்: 2 வாரங்களுக்கு மலை ரயில் சேவை கிடையாது..!!

Author: Aarthi Sivakumar
1 November 2021, 12:54 pm
Ooty Train UNESCO -Updatenews360
Quick Share

கோவை: தொடர் கன மழையால் ஊட்டி மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை கடந்த செப்டம்பர் 6ம் தேதி தொடங்கப்பட்டது. தினமும் ஊட்டி-குன்னூர் இடையே 3 முறை, மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஒரு முறை இயக்கப்படுகிறது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சீரமைப்பு பணி முடிந்து கடந்த அக்டோபர் மாதம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த அக்டோபர் 10ம் தேதி கல்லார்-அடர்லி இடையே மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டது. மேலும், பாறைகள் மலை பகுதியில் இருந்து உருண்டு விழுந்து போக்குவரத்தில் தடை ஏற்படுத்தியது. ஊழியர்கள் அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

எனினும், தொடர் மழையால் ஊட்டி மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 393

0

0