ஊட்டி மலை ரயில் 6ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

Author: Udhayakumar Raman
3 September 2021, 10:48 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மலை ரயில் வரும், 6ம் தேதியில் இருந்து முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி மலை ரயில் என அழைக்கும் நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால், மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் நிறுத்தப்பட்டு, டிசம்பர் மாதம் 31ம் தேதி துவங்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை, துவங்கியதால், ஏப்ரல் 21ம் தேதி மீண்டும் மலை ரயில இயக்கம் நிறுத்தப்பட்டது.தற்போது நீலகிரியில் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகை துவங்கியுள்ளது . எனவே மீண்டும் மலை ரயில் இயக்க தென்னக ரயில்வே சேலம் கோட்டம் முடிவு செய்தது.இதன்படி வரும் 6ம் தேதியில் இருந்து மலை ரயில் இயக்கப்பட உள்ளது. முழு முன்பதிவுடன் சிறப்பு மலை ரயிலாக இயக்கப்படுகிறது.

Views: - 132

0

0