தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் திறப்பு : தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

12 November 2020, 10:54 am
Theatres OPen - Updatenews360
Quick Share

தீபாவளிக்கு அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள் 7 மாதங்களுக்கு பிற 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து நேற்றைய முன்தினம் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. புதிய திரைப்படங்கள் வெளியாகததால் ஏற்கனவே வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டன.

ஆனால் கொரோனா அச்சுறுத்தலாலும், பழைய திரைப்படங்கள் வெளியீட்டாலும் பெரும்பாலான தியேட்டர்களி கூட்டமின்றி வெறிச்சோடியே காணப்பட்டது. பார்வையாளர்கள் வராததால் 800 தியேட்டகளை திறக்காமல் மூடியே வைத்தனர்.

இந்த நிலையில் விபிஎப் கட்டண பிரச்சனையில் தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்தால் தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தீபாவளி முதல் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Views: - 37

0

0