மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் கொரோனா முதலுதவி மையங்கள் துவக்கம்
28 September 2020, 9:18 pmகோவை:கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் கொரோனா முதலுதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு 5 மண்டலங்களிலும் கொரோனா முதலுதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர்களின் நோயின் தன்மையை பொருத்து மருத்துவ அலுவலர்களால் நோயாளிகள் தகுந்த சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள். எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் பதட்டம் அடையாமல் கோயம்புத்தூர் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களில் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரோன முதலுதவி சிகிச்சை மையங்கள் :
- மத்திய மண்டலம் : 0422-4279467
பத்மாவதி கல்சுரல் மையம் - தெற்கு மண்டலம் :
CBM கல்லூரி, கோவைப்புதூர். - வடக்கு மண்டலம் : 0422-2560381
இராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி வளாகம், ஆவாரம்பாளையம். - மேற்கு மண்டலம் : 0422-2450099
அரசினர் தொழில்நுட்பக்கல்லூரி, லாலிரோடு. - கிழக்கு மண்டலம் : 0422-2595950
வெங்கடலட்சுமி திருமண மண்டபம், சிங்காநல்லூர்,
கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு
தொடர்பு கொள்ளவும் 1077, 0422-2302323, 9750554321.