ரெம்டெசிவிர் தட்டுப்பாடும்…பிரதமர் மோடிக்கு கடிதமும்…. எடப்பாடியார் காட்டிய அதிரடி வேகம்!!

16 May 2021, 12:45 pm
modi - eps - updatenews360
Quick Share

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் என்னும் மருந்து டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது கொரோனாவை குணப்படுத்துவதற்குரிய நேரடி மருந்து இல்லை என்றாலும் கூட சில குறிப்பிட்ட சதவிகிதம் வரையிலான நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயனளிப்பதாக இருக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தையே டாக்டர்களும் பரிந்துரைப்பதால் இதற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இல்லாத நபர்களுக்கு இந்த மருந்து தேவைப்படுவதில்லை.

Corona_Test_UpdateNews360

எனினும், இந்தியா முழுவதுமே இந்த மருந்தை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்கு தினமும் ரெம்டெசிவிர் மருந்து 20 ஆயிரம் குப்பிகள் தேவை. ஆனால் தமிழகத்திற்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற அளவில்தான் மத்திய அரசிடம் இருந்து ரெம்டெசிவிர் அன்றாடம் கிடைத்து வருகிறது.

10, 15 நாட்களுக்கு முன்பு, இந்த அளவு மருந்து போதுமானதாக இருந்தது. தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் ரெம்டெசிவிரின் தேவையும் அதிகமாகி விட்டது.

remdesiver - updatenews360

மே15-ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் கொரோனாவால் அன்றாட பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 658 ஆகும். முதல் முறையாக பலி எண்ணிக்கை 300-ஐ கடந்து 303 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 20 ஆயிரத்து 905 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதை சில சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச்சந்தையில் பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்தும் வருகின்றனர். இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டும் இருக்கின்றனர். இவர்களில் சில டாக்டர்கள் என்பதும் வேதனைக்குரிய விஷயம்.

Coronavirus_UpdateNews360

இதைத்தொடர்ந்து, ரெம்டெசிவிர் மருந்து வழங்குவதை தமிழக அரசு முறைப்படுத்தியது. தகுந்த ஆவணங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் மீறி பல இடங்களில் கள்ளச்சந்தையில் இந்த மருந்து தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.m இதனால் கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதுமே, ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 தனிக் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இந்த மருந்து தினமும் 500 பேருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் ரெம்டெசிவிர் வாங்குவதற்கு கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இந்த மருந்தை வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காததால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டது.

remdesiver medicen crowd - updatenews360

இவர்களால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவருடைய உறவினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாய நிலையும் உருவானது.

இதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யும் இடத்தை நேரு விளையாட்டு அரங்கிற்கு மாற்றியது. அங்கும் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருந்து வாங்க திரண்டனர்.

ஆனால் முன்கூட்டியே டோக்கன் கொடுக்கப்பட்டவர்களுக்கு பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட வேறு நபர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து நாள்கணக்கில் இந்த மருந்தை வாங்குவதற்காக அலைந்து திரிந்து கால் கடுக்க காத்திருந்த 50-க்கும் மேற்பட்டோர் திடீரென ஆவேசம் அடைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த காட்சிகள் டெலிவிஷன் சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவி பெரும் பேசு பொருளாகவும் மாறியது.

இதைத்தொடர்ந்து, தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை எழுதினார்.

EPS_Modi_UpdateNews360

அவர் காட்டிய அந்த சுறு சுறு வேகம், நிலைமையின் வீரியத்தை உணர்த்துவதாக இருந்தது.
கொரோனா நோயாளிகளுக்காக அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் படும் பெரும் அவஸ்தையை புரிந்துகொண்டதாவும் இருந்தது.

தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், “தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 32 ஆயிரம் பேர் கொரோனா 2-ம் அலையால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. எனவே கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக மத்திய அரசு ஆக்சிஜன் வினியோகத்தை தமிழகத்திற்கு அதிகப்படுத்தவேண்டும். தேவைப் படும் அளவிற்கு ரெம்டெசிவிர் மருந்தை அதிகரித்து வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டுக்கு அதிக அளவிலான தடுப்பூசி மருந்தையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வெளிநாடுகளில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் மருத்துவர்கள் 600 பேரை உடனடியாக பயிற்சி மருத்துவர்களாக பணியமர்த்தி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கு அதிக உதவிகள் செய்யும்படி கோரி கடிதம் எழுதி இருப்பது, குறிப்பிடத்தக்கது.

அவருடைய தலைமையிலான அதிமுக அரசு, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக நாட்டிலேயே முதல் இடம் பிடித்து நற்சான்றிதழ் பெற்றதால்தான் என்னவோ, எடப்பாடி பழனிச்சாமிக்கு இயல்பாகவே கொரோனாவை அடியோடு ஒழித்துக் கட்டுவதில் தீவிர ஆர்வம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக பணியாற்றுவதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்போதும்போல் காட்டி வரும் ஒரே மாதிரியான அக்கறை மிகவும் பாராட்டுக்குரியது” என்றும் அந்த சமூக ஆர்வலர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

Views: - 137

0

0