7.5% ஒதுக்கீட்டால் கோவையில் 15 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் வாய்ப்பு : அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல்…

29 November 2020, 5:47 pm
SP Velumani - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் 21 மாணவர்களில் 15 பேருக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது என அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியுள்ளார்.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 தடுப்பணைகள் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இதில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்ச் எஸ்பி வேலுமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முதலமைச்சர்அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்.

கிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆள முடியும் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்த நிலையில் மக்களை காப்பதற்காக நேரடியாக செம்பரம்பாக்கம் அணைக்குச் சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர 21 பேர் செய்ய தேர்வு செய்யப்பட்ட நிலையில் 15 பேருக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 6 பேர் காத்திருப்பில் உள்ளனர்.

கோவையில் உள் ஒதுக்கீட்டில் தேர்வான 15 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளது என கூறினார்.

Views: - 17

0

0