பொங்கல் விழாவில் பங்கேற்க திமுக எம்எல்ஏவிற்கு எதிர்ப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு..!!

14 January 2021, 7:40 pm
kkumari - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: குலசேகரம் அருகே கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்ள சென்ற பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கோவில்களிலும் ஊர்களிலும் பொதுமக்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் குமரி மாவட்டம் குலசேகரம் அருகே கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்ள சென்ற பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கோவிலுக்குள் செல்ல விடாமல் ஊர் பொது மக்கள் தடுத்தி நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால் ஊர் பொதுமக்கள் எம்எல்ஏவை கோவிலுக்குள் கடைசிவரை அனுமதிக்காததால் மனோ தங்கராஜ் எம்எல்ஏ அங்கிருந்து திரும்பி சென்றார்.

Views: - 8

0

0