ஆசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு : வேளாண் பல்கலை.,யில் முனைவர் பட்ட மாணவர்கள் போராட்டம்!!

30 December 2020, 1:55 pm
Cbe Agri Protest -Updatenews360
Quick Share

கோவை : அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இருந்து ஆசிரியர்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முனைவர்பட்ட மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எந்த பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு நடைபெறவில்லை. இப் பல்கலைக்கழகத்தில் சுமார் 2000 பேர் முனைவர் பட்டம் படித்து ஆசிரியர் நியமனத்திற்கான காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் பல்கலைக்கழக நிர்வாகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து 51 பேராசிரியர்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நியமனம் செய்ய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முனைவர் பட்ட மாணவர்கள் வேளாண் பல்கலைக்கழகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 10

0

0