5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…தீபாவளி வரைக்கும் மிக கனமழைக்கு வாய்ப்பு: கவனமா இருங்க மக்களே!!

Author: Aarthi Sivakumar
31 October 2021, 2:12 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் நவம்பர் 2ம் தேதிவரை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் புயல் : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் ! - TopTamilNews

டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தை புரட்டி எடுக்க போகும் மழை.. "ஆரஞ்சு அலர்ட்" வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை.!! - Seithipunal

நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 357

0

0