செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

25 November 2020, 9:32 am
Chembarambakkam - Updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் நிரம்பும் தருவாயில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் வேகமாக முழு கொள்ளளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

22 அடியை செம்பரம்பாக்கம் நீர் மட்டம் நெருங்கி வருவதால் நண்பகல் 12 மணிக்கு எரியில் இருந்த நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கத்தில் இருந்து 1000 கன அடி நீர் திறக்க பொதுப்பணித் துறை உத்ரவிட்டுள்ளது.

மேலும் அடையாறு வழியே செம்பரம்பாக்கம் நீர் செல்வதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களை நோக்கி அனுப்பும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 22

0

0