“அது திராவிடம் போட்ட பிச்சை“ : நீதிமன்றத்தை களங்கப்படுத்திய ஆர்எஸ் பாரதி மீது வழக்கு தொடர உத்தரவு!!
19 January 2021, 1:37 pmசென்னை : திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதிக்கு எதிராக வழக்கு தொடர அட்வகேட் ஜெனரல் அனுமதி அளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்எஸ் பாரதி, ஆதி திராவிட சமூகத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிடம் பேட்ட பிச்சை என பேசினார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காவல் நிலையத்தில் ஆர்எஸ் பாரதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆர்எஸ் பாரதியின் பேச்சு கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆர்எஸ் பாரதியின் பேச்சு நீதித்துறையை களங்கப்படுத்தும் வகையில் உள்ளதால் அவருக்கு எதிராக வழக்கு தொடர அட்வகேட் ஜெனரலிடம் அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து அம்மனுவை விசாரித்த அட்வகேட் ஜெனரல், ஆர்எஸ் பாரதியின் பேச்சு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உகந்தது என்பதால் வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான ஆர்எஸ் பாரதிக்கு, இந்த சம்பவம் ஒன்று புதிதல்ல என்பது தமிழகமே அறிந்த விஷயம் தான். தன்னை சுற்றி எந்த சர்ச்சை வந்தாலும் கண்டுகொள்ளாத ஆர்எஸ் பாரதிக்கு நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0
0