99 வயது சுதந்திர போராட்ட வீரரின் கோரிக்கை: நவ.26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு…!!

12 November 2020, 4:04 pm
highcourt - updatenews360
Quick Share

சென்னை: தியாகிகள் ஓய்வூதியம் கோரிய 99 வயது சுதந்திர போராட்ட வீரரின் கோரிக்கை பற்றி முடிவெடுத்து நவம்பர் 26ம் தேதிக்குள் தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கஃபூர் ஓய்வூதியம் கேட்டு தாக்கல் செய்த மனு 23 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. விசாரணையில் மனுதாரரின் பிறந்த தேதியிலும், சக கைதிகளின் சான்றுகளிலும் வேறுபாடு இருந்ததால், கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

99 வயது முதியவரை தியாகிகள் ஓய்வூதியத்திற்காக நீதிமன்றத்தை நாட செய்த செயலற்ற தன்மைக்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மனுதாரர் வயது சான்றாக ஆதார் அட்டையை சமர்ப்பித்துள்ளதாகவும், சக கைதி கண்ணன் என்பவர் அளித்த சான்றில் தட்டச்சு குறைபாடு மட்டுமே இருப்பதாகவும், இந்த ஆவணங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்குவது குறித்து முடிவெடுத்து, நவம்பர் 26ம் தேதிக்குள் தெரிவிக்க தமிழக அரசுக்கு நவம்பர் 26ம் தேதிக்குள் தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Views: - 22

0

0