சாலையில் சிதறிக் கிடந்த எஸ்பிஐ வங்கியின் ஒரிஜினல் ஆவணங்கள்..!கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு!!

27 January 2021, 12:15 pm
SBI forms On Road - Updatenews360
Quick Share

கோவை : கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் சிதறிக் கிடந்த வங்கி ஆவணங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரயில் நிலையத்திலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் எஸ்பிஐ வங்கியின் கோவை மண்டல தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த சாலையில் எஸ்பிஐ வங்கியின் கோவைப்புதூர், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு கிளைகளில் இருந்து பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமான சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் வங்கி அதிகாரிகளின் கையெழுத்துடன் சாலையில் சிதறி கிடக்கின்றன.

இந்த ஆவணங்களில் 2019ம் ஆண்டில் வாடிக்கையாளருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து திரும்பப் பெற்ற பணம் அல்லது அவர் செலுத்த வேண்டிய பணம் எவ்வளவு போன்றவை குறித்து தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் அதிகாரிகளின் கையொப்பமிட்ட ஒரிஜினல் நகல்களும் அடங்கும். இதனால் இது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வங்கி அதிகாரிகளின் அஜாக்கிரதையால் முக்கிய ஆவணங்கள், மண்டல தலைமை அலுவலகம் அருகே சாலையில் சிதறிக் கிடந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0