வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரிய மலர் அழுகி போகும் அவலம்! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!
20 January 2021, 1:37 pmதிண்டுக்கல் : கொடைக்கானலில் வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் அழுகி வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மரத்தில் பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூக்க துவங்கியது. ஜனவரி மாதம் பூக்க துவங்கும் இந்த மலர்கள் பிப்ரவரி , மார்ச் மாதாங்கள் வரை நீடிக்கும்.
இளம்சிவப்பு நிறத்தில் பூக்கும் இந்த மலர்கள் மரத்தில் பூக்கும் நேரத்தில் அழகாக காட்சி அளிக்கும். மேலும் பிரையண்ட் பூங்காவிற்கு வரும் பயணிகள் இந்த மலர்களை க்ண்டு ரசித்து செல்வர். மேலும் புகைப்படம் எடுத்தும் மகிழ்வர். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் இந்த ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் கடந்த வாரம் பூக்க துவங்கிய நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கொடைக்கானலில் கன மழையானது வெளுத்து வாங்கியது.
இதனால் பூத்து குழுங்கிய மலர்கள் அனைத்தும் அழுகி வருகிறது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
0
0