சொத்துக்காக அடித்துக்கொண்ட அண்ணன் தம்பி: மனமுடைந்த முதிய தம்பதி தற்கொலை செய்த பரிதாபம்!!

Author: Udhayakumar Raman
7 December 2021, 8:53 pm
Quick Share

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் முதிய தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு அருகே உள்ள முக்கையகவுண்டனூர் என்ற கிராமத்தில் வசித்துவந்த பொப்பனனகவுண்டர்(75), வெள்ளையம்மாள்(70) ஆகிய தம்பதிகளுக்கு அழகர்சாமி, முத்துச்சாமி, மணி, முத்தம்மாள் என இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்கள். இதில் அழகர்சாமி, முத்துசாமி என்பவர் அதே ஊரில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். மணி மற்றும் முத்தம்மாள் ஆகியோரை குஜிலியம்பாறை அருகே திருமணம் செய்து கொடுத்து மருமகன் வீட்டில் இருந்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து அழகர்சாமி, முத்துச்சாமி ஆகியோருக்கு பெற்ற தகப்பன் தாயாரிடம் சொத்து தகராறு காரணமாக அடிக்கடி சண்டை எழும்பியுள்ளது என கூறப்படுகிறது.

பெற்ற மகன்களால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதை தாங்கிக்கொள்ள முடியாத முதிய தம்பதியினர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் குருணை மருந்தை குடித்து இரவில் உறங்கி விட்டதாகவும், காலை வீட்டிலிருந்து வெளியே வராத முதியவர்கள் என்னாயிற்று என்று அக்கம்பக்கத்தினர் பார்க்கையில் இருவரும் சடலமாக கிடந்துள்ளார். இது சம்பந்தமாக எரியோடு காவல் துறையினரிடம் தகவல் கொடுத்ததின் பேரில், சடலத்தை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளார்கள்.சொத்து பிரச்சனை காரணமாக பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து எரியோடு போலீசார் அழகர்சாமி மற்றும் முத்துசாமி, மணி, முத்தம்மாள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர்.

Views: - 267

0

0