கோவை -திருச்சிரோடு, கவுண்டம்பாளையம் மேம்பாலங்கள் பணிகள் முடிந்து மார்ச் மாதம் திறக்க முடிவு செய்திருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை- திருச்சி சாலையில் ரெயின்போவில் இருந்து பங்கு சந்தை வரை 3 கி.மீ. தூரத்துக்கு ரூ.232 கோடியிலும், மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் 1 கி.மீ. தூரத்தில் ரூ.50 கோடியிலும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, சர்வீஸ் சாலை திருச்சி சாலையில் சுங்கம் பகுதியில் மேம்பாலம் இறங்கும் பகுதி பணிகள் முழுமை அடையவில்லை. ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணி முடிந்ததும் இறங்குதள பணி முடிந்துவிடும். மேம்பாலம் ஏறும் பகுதியான ரெயின்போ பகுதியில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டியது உள்ளது. மாநகராட்சி பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும். இதேபோல் கவுண்டம்பாளையத்திலும் சர்வீஸ் சாலை பணிகள் நடைபெற வேண்டியது உள்ளது.
மார்ச் மாதம் திறப்பு 2 மேம்பால பணிகளும் விரைவில் முடிவடைந்து விடும் என்பதால் வருகிற மார்ச் மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலங்கள் திறக்கப்படுவதன் மூலம் திருச்சிரோடு, மேட்டுப்பாளையம் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
This website uses cookies.