பைக்கில் முந்திச்சென்றதால் விபரீதம் : கிரிக்கெட் ஸ்டம்பால் அடித்து இளைஞர் கொலை.!

27 August 2020, 5:41 pm
tirupur Murder Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூரில் பைக்கில் முந்தில் செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அரசு கல்லூரி மாணவர் விடுதியில் கிரிக்கெட் ஸ்டம்பால் அடித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது . கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடுதியில் இருந்த மாணவர்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விடுதியில் மாணவர்கள் மற்றும் பாதுகாவலர் யாரும் இல்லாத சூழ்நிலையில் இன்று காலை கல்லூரி விடுதியின் 11 வது அறையில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் உயிரிழந்த இளைஞர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த 28 வயதான அருண்குமார் என்பதும், அருண்குமார் பைக்கில் வந்த பொழுது முத்துக்குமார் என்பவரை முந்தி சென்றதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் முத்துக்குமார் தனது நண்பர்கள் தமிழ்ச்செல்வன், பரத்குமார், சுந்தரம் ஆகியோருடன் இணைந்து கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் நால்வரையும் கைது செய்தனர்.

Views: - 41

0

0