கடன் தொல்லையால் சாலையில் தீக்குளித்த வெல்டிங் கடை உரிமையாளர்… வைரலாகும் பதறவைக்கும் காட்சிகள்…

Author: kavin kumar
31 January 2022, 11:09 pm
Quick Share

திருச்சி திருச்சி அருகே கடன் தொல்லையால் வெல்டிங் கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே உள்ள கும்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (58). இவருக்கு முத்துலட்சுமி (47), என்ற மனைவியும் சிவக்குமார் (27), சூரிய பிரகாஷ் (22) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சேகர் இரண்டு நிதி நிறுவனங்களில் சுமார் 25 லட்ச ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். மாதந்தோறும் தவணை தொகையை சாரியாக கட்டி வந்த அவர், தொடர்ந்து பணம் கட்ட முடியாததால் வீட்டை விற்று பணம் தருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று தஞ்சை ரோடு தர்பார் மேடு மாரியம்மன் கோயில் அருகிலுள்ள அவரது வெல்டிங் கடைக்குச் சென்ற தனியார் கடன் நிறுவன ஊழியர்கள் பணத்தை கட்ட வேண்டும் என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவமானம் தாங்க முடியாததால் சேகர் நீதிமன்ற அருகில் பெட்ரோல் ஊற்றி தாக்கு தானே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த செஷன் கோர்ட் காவல் நிலைய காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 471

0

0