தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு ஒரு நாளுக்கு மட்டுமே உள்ளது : சுகாதாரத்துறை தகவல்..

7 May 2021, 4:50 pm
Oxygen -Updatenews360
Quick Share

தமிழகத்தில் தேவையான ஆக்சிஜன் ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்படுபவர்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜரான தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு தினமும் 475 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் பாலக்காட்டில் உற்பத்தியாகும் 40 டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவது குறித்து ஒரு வாரத்தில் தெரியவரும் என்றார்.

இதையடுத்து தமிழகத்துக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு இன்றைக்குள் உறுதி செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 12ஆம தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Views: - 107

0

0