தஞ்சாவூரில் நெல் மூட்டைகள் தேக்கம்: கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!!

Author: Aarthi Sivakumar
24 June 2021, 4:10 pm
Quick Share

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால் கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் அறுவடை பணிகள் நடைபெறுவதால் 193 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் அருகே காட்டூர், வாண்டையார் இருப்பு, சடையார்கோவில், நெய்வாசல், பொன்னாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் தலா 10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

போதிய இடமில்லாமல், கொள்முதல் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறியதாவது, கொள்முதல் நிலையங்களில் உள்ள, நெல் மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பாமல், சேமிப்பு கிடங்கில்உள்ள மூட்டைகள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கொள்முதல் நிலையங்களில் போதிய இடமில்லாததால், கொள்முதல் பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். நிர்வாகம் போதுமான தார்பாய்கள் வழங்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Views: - 209

0

0