தொழில் போட்டியில் பெயிண்டர் கொலை : நண்பன் கைது !

4 October 2020, 7:39 pm
Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் : தொழில்போட்டி காரணமாக பெயிண்டர் அடித்து கொலை செய்த சக நண்பனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் அடுத்த கோல்டன் நகர் அடுத்துள்ள கருணாகரபுரி பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று சுரேஷ்குமார் அவர் தங்கியிருந்த அறையின் அருகில் தலையில் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் வடக்கு போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ்குமாரின் அறையின் அருகில் தங்கியிருந்த செல்வகுமார் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் செல்வகுமாரும் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். செல்வகுமாருக்கு வரும் பெயிண்ட் பணிகளை சுரேஷ்குமார் எடுத்து கொண்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், மதுபோதையில் இருந்த சுரேஷ்குமாரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, செல்வகுமாரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.