கோவையில் தனியார் பேருந்து மோதி பெயிண்டர் பலி? போலீசார் விசாரணை!!
18 January 2021, 1:42 pmகோவை : கோவை சிவானந்தா காலனியில் தனியார் பஸ் மோதி பெயிண்டர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சேகர் (வயது 37). பெயிண்டராக உள்ள இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில் இன்று காலை சிவானந்தா காலனியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்றார். பின்னர் நடந்து வரும் போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு கிழக்கு போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தொடர்ந்து இந்த வழக்கு ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். முடிவில் அவர் பஸ் மோதி உயிரிழந்தாரா அல்லது பஸ்ஸில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற உண்மை நிலை தெரியவரும்.
0
0