பழனி – கோவை சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து : 3 பயணிகள் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 10:59 am
Palani 3 Dead -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவை நோக்கி சென்றது. பழனியை அடுத்துள்ள தாழையூத்து அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஒன்று அரசு பேருந்து மீது மோதியதில் அரசு பேருந்து பலத்த சேதமடைந்தது.

மேலும் பேருந்து மீது மோதிய லாரி சாலையில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாமிநாதபுரம் போலீஸார் பேருந்தில் சிக்கி படுகாயமடைந்த லாரி டிரைவர் ராஜேஷ் உட்பட 20க்கும் மேற்பட்டோரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இறந்த மூவரில் ஒருவர் பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்ட பிரபு என்பதும்,ஒருவர் அருப்புக்கோட்டை காரியாபட்டி அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ருக்கிரபாண்டி என்பதும் தெரியவந்தது. மேலும் இறந்த மூன்றாவது நபரின் விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 215

0

0