பழனி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் பலி : திரையரங்கு உரிமையாளர் மீது கொலை வழக்குப்பதிவு..!!

17 November 2020, 11:02 am
palani gun shoot dead - updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி அருகே நிலப் பிரச்சனையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

திரையரங்கு உரிமையாளர் நடராஜனுக்கும், இளங்கோவன் என்பவருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இளங்கோவனின் உறவினர் சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் நேற்று சென்றுள்ளனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக, தொழிலதிபர் நடராஜன், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுப்ரமணி மற்றும் பழனிச்சாமி ஆகியோரை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், குண்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சுப்ரமணி, அது பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இதையடுத்து, நடராஜன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, நடந்த சம்பத்தை கூறி பழனி நகர காவல்நிலையத்தில் நடராஜன் சரண் அடைந்ததுடன், துப்பாக்கியையும் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 32

0

0