லோடு ஆட்டோவையே நகர்த்திய பலத்த சூறை காற்று… துரத்திக் கொண்டு ஓடிய ஓட்டுநர் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 8:49 am
Quick Share

பழனியில் தொடர் கனமழையால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ பலத்த காற்றில் நகர்ந்து சென்ற காட்சிகள் இணையத்தில் பதிலாக பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் திடீர் பெய்த மழை காரணமாக பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், கீரனூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பலத்த காற்றுடன் பெய்தது.

இதனால் நெய்க்காரப்பட்டியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ ஒன்று பலத்த காற்றில் தானாக நகர்ந்து சாலையின் குறுக்கே சென்று இருசக்கர வாகனத்தை மோதி விட்டு செல்லும் சிசிடிவி காட்சிகளும், உரிமையாளர் வாகனத்தின் பின்னே ஓடி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

மேலும் சாலையில் எந்த வாகனங்களும் குறுக்கே வராததால் நல்வாய்ப்பாக எந்த விபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 149

0

0