‘ரூ.10 லட்சத்து வட்டி கட்டுறேன்.. பணம் தரலைனா தற்கொலை செய்து கொள்வேன்’… பழனி கோவில் முன்பு ஒப்பந்ததாரர் தர்ணா!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 7:23 pm
Quick Share

பழனி தண்டாயுதபாணி சுவாமி நிர்வாகத்துக்கு எதிராக தற்கொலை செய்யப் போவதாக கூறி ஒப்பந்தக்காரர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா, பங்குனி உத்திர திருவிழா போன்ற விசேஷ காலங்களிலும், திருக்கோவில் மற்றும் திருக்கோவிலுக்கு சொந்தமான கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் உட்பட வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, தற்காலிக நிழற் பந்தல்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் வேலை செய்த கிரி அண்ட் கோ என்ற ஒப்பந்தக்காரரான கிரி பிரசாத் என்பவர் வேலை எடுத்து செய்து முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், வேலை செய்ததற்கு பணம் தராமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், இன்று கோவில் நிர்வாக அலுவலகம் முன்பாக கிரி பிரசாத் என்பவர் 10 லட்ச ரூபாய்க்கு மேல் கோவில் நிர்வாகம் எனக்கு பணம் தராமல் இழுத்தடிப்பதாகவும், கோவில் இணை ஆணையர் நடராஜன் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் இன்று வரை செய்த பணிகள் குறித்த விபரங்கள் , காசோலை வழங்காததற்கான காரணம் குறித்தும் பதிவு தபாலில் கோவில் நிர்வாகத்திற்கு அணிப்பியும், பதில் தராத இணை ஆணையர் நடராஜனை கண்டித்தும் திருக்கோவில் தலைமை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தன் குடும்பமே நடுதெருவிற்கு போய்விடும் நிலையில் இருக்கிறது, இருக்கவா ? சாகவா எனவும் ,கோவில் நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 லட்ச ருபாய்க்கு மாதம் 60 ஆயிரம் வட்டி கட்டுகிறேன் என்று கூறியும், இந்த மாசம் கோவில் நிர்வாகம் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 323

0

0