மணக்கோலத்தில் காட்சியளித்த முத்துக்குமாரர் – வள்ளி, தெய்வானை : வெள்ளித்தேரில் வீதிஉலா… பழனியில் பரவசம்..!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 9:37 pm
Quick Share

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை சமேதராக வெள்ளித்தேரில் ஏறி வீதிஉலா வந்து அருள்பாலித்தனர்‌.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்‌ திருவிழாவின் ஆறாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வயானை திருக்கல்யாண நிகழ்ச்சி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது.

அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை கழுத்தில் மங்களநாணை சூட்டினார். தொடர்ந்து தம்பதி சமேதராக மணக்கோலத்தில் வள்ளி – தெய்வானையுடன் தம்பதி சமைதராக வெள்ளி எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசாமி, நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்‌.

தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மாலை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Views: - 173

0

0