5,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி… கோழிப்பண்ணையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
5 October 2022, 1:25 pm
Quick Share

பழனி அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது சத்திரப்பட்டி. இங்கு வசித்து வருபவர் கர்ணன். விவசாயியான இவருக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்‌.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோழிப் பண்ணையில் திடீர் திவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கர்ணன் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர்.

இருப்பினும், இவ்விபத்தில் பண்ணையில் இருந்த ஐந்தாயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியானது. இதுகுறித்து கர்ணன் கொடுத்த புகாரின்பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோழிப்பண்ணை ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 376

0

0