வரவு-செலவு கணக்கை வீடு வீடாக விநியோகித்த ஊராட்சி மன்ற தலைவர்!!!

Author: Aarthi
3 October 2020, 10:41 am
nagai uratchi - updatenews360
Quick Share

நாகை: கருப்பம்புலம் ஊராட்சியின் மன்ற தலைவர் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்களை பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று கொடுத்து முன்மாதிரியாக மாறியுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கருப்பம்புலம் ஊராட்சியில் சுழற்சி முறையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இத்தொகுதி பொது தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர் கடும்போட்டி நிலவியது. இதில் பட்டதாரி இளைஞர் சுப்புராமன் வெற்றி பெற்றார். பதவியேற்றது முதலே கட்டட பராமரிப்பு, குடிநீர், மின்சாரம் என தனது பணியை சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் செய்து வந்துள்ளார் சுப்புராமன்.

மேலும், ஊராட்சியின் வரவு-செலவு கணக்கை வெளிப்படையாக நோட்டீசாக அடித்து வீடு வீடாக விநியோகம் செய்துள்ளார். எவ்வளவு வரி வசூல் ஆனது? மொத்த செலவு எவ்வளவு? கையிருப்பு எவ்வளவு? உள்ளிட்ட மொத்த விவரங்களையும் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார் இளம் ஊராட்சி மன்ற தலைவர்.

இதுகுறித்து சுப்புராமன் தெரிவிக்கும்போது, ஊராட்சியில் நடக்கும் வரவு செலவு கணக்குகளை ஊர் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஊராட்சி குறித்த நிலவரங்கள் மக்களுக்கு புரியவரும் என சுப்புராமன் தெரிவிக்கிறார்.

Views: - 71

0

0