விஏஓ வாகனத்தை கீழே தள்ளி ரகளை செய்த திமுக ஊராட்சி மன்ற துணைத்தலைவர்: வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
7 November 2022, 1:06 pm
VAO - updatenews360
Quick Share

திருச்சி: கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி தகராறில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள முத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சுரேஷ்குமார். இவர் நேற்று புதிய வாக்காளர் சேர்க்கும் தனது பணியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகையில் இவர் எதிரே வந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன் என்பவரும், மற்றொரு நபரும் நடுவெளியில் கிராம நிர்வாக அலுவலர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

VAO - updatenews360

அப்போது கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி கிராம நிர்வாக அலுவலரை திட்டியதாக தெரிகிறது. ஏன் எதற்காக வழிமறிக்கப்பட்டார், நடந்து என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Views: - 302

0

0