சாதியால் சுதந்திர தினத்தில் பறிபோன உரிமை: குடியரசு தினத்தில் மீட்டெடுத்த பெண் ஊராட்சி தலைவர்..!!
26 January 2021, 3:08 pmதிருவள்ளூர்: சுதந்திர தின விழாவில் தேசிய கொடியினை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவர் இன்று குடியரசு தின விழாவில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆத்துபாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பட்டியலினத்தை சேர்ந்த பெண் அமிர்தம் வேணு. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம்தேதி சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்ற இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீண்டும் அவரை சுதந்திரக் கொடியை ஏற்ற வைத்தனர். இதனையடுத்து, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அமிர்தம் வேணு.
இதனை தொடர்ந்து, குடியரசு தின நாளில் ஊராட்சி அலுவலகத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கோங்கல்மேடு கிராமத்தில் உள்ள எலிசெபத் தனியார் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சி தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
0
0