தமிழகம்

கீழ் வீட்டில் இருந்தும் கவனிக்க முடியவில்லையா..? மயிலாடுதுறையில் இறுக்கமானதா உதிர உறவு?

மயிலாடுதுறையில், தங்களைக் கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை முயற்சி எடுத்த கணவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த நீடூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன் (69) – செந்தாமரை (59) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இளங்கோவன், ஹோமியோபதி மருத்துவராக இருந்தவர். மேலும், திராவிடர் கழகத்திலும் பொறுப்பில் இருந்துள்ளார்.

அதேநேரம், மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகள்கள் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். அதேபோல், வீட்டின் கீழ்பகுதியில் மகன் தன் மனைவியுடன் தனியாகவும், மாடியில் இளங்கோவனும், செந்தாமரையும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இளங்கோவனும், செந்தாமரையும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில வருடங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். ஆனால், மகனும், மருமகளும் அவர்களைக் கவனித்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை இளங்கோவன் வீட்டிலிருந்து பெரிய சத்தம் கேட்டுள்ளது.

இதனால் வீட்டின் ஒரு பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும், மாடிப் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில் வந்த தீயணைப்பு வீரர்களுடன், அருகில் இருந்தவர்களும் தீயை அணைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது, உடல் எரிந்த நிலையில் செந்தாமரை இறந்து கிடந்துள்ளார். அவரது மடியில் தலைவைத்தபடியே தீக்காயங்களுடன் இளங்கோவனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து, அவரை தூக்கச் சென்றவர்களிடம், `என் மனைவி செத்துப் போயிட்டாள், நானும் செத்துப்போறேன், என்னை பொழைக்க வைக்காதீங்க, இங்கேயே போட்டுடுங்க’ எனக் கதறியிருக்கிறார்.

இதையும் படிங்க: யாரு இவுங்க.. இங்கயே நிக்குறாங்க.. தட்டித்தூக்கிய பொதுமக்கள்.. பாராட்டிய போலீசார்!

இதனைத் தொடர்ந்து, உடனே அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், 90 சதவீதம் உடல் தீயில் எரிந்த நிலையில், அபாயக் கட்டத்தில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், “எங்களை யாரும் கவனிக்கவில்லை. நோயுடன் அவதிப்பட்டதைவிட யாரும் அக்கறை காட்டாததே எங்களுக்கு துயரத்தையும், வலியையும் தந்தது. எனவே, தற்கொலை செய்து கொள்வதற்காக சிலிண்டரை வெடிக்க வைத்தோம்” என இளங்கோவன் வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சரி, நாங்கள் வைத்தால் தவறா? கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!

வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…

2 hours ago

சமூக நீதி விடுதி; பெயரை மட்டும் மாற்றினால் சரியாகிவிடுமா? எல்.முருகன் சரமாரி கேள்வி!

இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…

3 hours ago

முருகன் கோவிலுக்குள் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு! ஆனால் தமிழிசைக்கு அனுமதி? வெடித்த சர்ச்சை…

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…

4 hours ago

சொமேட்டோ, ஸ்விக்கிக்கு டாட்டா காட்டிய ஹோட்டல் உரிமையாளர்கள்?  உதயமான புதிய உணவு  டெலிவரி ஆப்!

சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…

5 hours ago

நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு? நுகர்வோர் ஆணையத்தில் இருந்து பறந்த நோட்டீஸ்!

பண மோசடி வழக்கு  கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…

5 hours ago

இறந்தது தெரியாமல் 5 நாட்கள் கணவருடன் வசித்த மனைவி… மனதை பதற வைத்த சம்பவம்!

கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…

6 hours ago

This website uses cookies.